டாய்லெட்டை சுத்தம் பண்ணும் முன்பு முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க: இந்த த.வ.றை செய்யவே கூடாதாம்..!
நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு டாய்லெட் என்று கூறினாலே சற்று முகம்சுழிக்கும் நிலையாகத் தான் இருக்கும். காரணம் டாய்லெட்டில் இருந்து பல கிருமிகள் நோய்களை பறப்புகின்றது.
இதனால் வீட்டில் கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் விரும்புவர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சுத்தம் கிடைப்பது என்பது கடினம். இங்கு டாய்லெட்டை சுத்தம் செய்யும் முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய விடயத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டாய்லெட் கிளீனர் திரவத்தை ஊற்றிவிட்டு உடனே தேய்த்துக் கழுவினால் கிருமிகள் அழியாது. திரவத்தை ஊற்றிவிட்டு சுமார் 15 நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும்.
டாய்லெட் சுத்தம் செய்யும் பிரஷ்ஷை அடிக்கடி மாற்ற வேண்டும். தேய்ந்து போன பிரஷ்ஷால் சுத்தம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை.
வெஸ்டர்ன் டாய்லெட்டின் மூடி, இந்தியன் டாய்லெட்டில் கால் வைக்கும் இடம், துவாரம் என அனைத்து இடங்களையும் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் தான் முழுமையாக சுத்தம் கிடைக்கும்.
டாய்லெட் மூடி, கால்வைக்கும் இடத்தில் வினிகர் ஊற்றி சில நிமிடங்களுக்குப் பின்பு அதில் சிறிது சோடா உப்பைத் தூவிவிட்டு மீண்டும் சிறிது வினிகர் ஊற்ற வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து பிரஷ்ஷால் அழுத்தத் தேய்த்தால், நீண்ட நாள் கறை காணாமல் போகும்.
சுத்தம் செய்யும் பணி நிறைவடைந்ததும், பிரஷ், தண்ணீர் கப் போன்றவற்றையும் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். டாய்லெட் ஃபிரஷ்னரை கதவில் மாட்டி வைக்கலாம்.

தேய்த்துக் கழுவியதும் போதுமான அளவு நீர் ஊற்றி நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் ஆங்காங்கே படிந்திருக்கும் அழுக்குகள் முழுமையாக நீங்கும்.
டாய்லெட்டைச் சுத்தம் செய்யும்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கையுறைகளை மாட்டிக்கொள்வது நல்லது. வேலை முந்ததும் கைகால், முகத்தினை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். குளிப்பதற்கு முந்தைய வேலையாக டாய்லெட் கிளீனிங் செய்துவிட்டால் நல்லது.