NEWS

திருமணம் ஆன 25 நாட்களில் கணவரை கொ.ல்.ல கூலிப்படையை ஏற்பாடு செய்த மனைவிக்கு நேர்ந்த சோகம்..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம், இவர் கம்பத்தில் கேபிளில் வசூல் செய்யும் பணி செய்து வருகிறார்.இவருக்கும் கம்பம் மந்தையம்மன் கோவில் பகுதியைச் சார்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் கடந்த 8-ந் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூ.க்.குப்.போ.ட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் தற்கொலை செய்ததால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ.(பொறுப்பு) சாந்தியும் விசாரணை நடத்தினார்.இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் தெரிவிக்கையில், புவனேஸ்வரிக்கு கவுதமுடன் வாழ விருப்பம் இல்லை.எனவே அவரை கொலை செய்ய புவனேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக தனக்கு தெரிந்த நபர்களை கூ.லிப்படையாக நியமித்தார்.அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் ஆண்டனி (20) என்பவரிடம் பணத்தை கொடுத்து தனது கணவரை குமுளிக்கு அழைத்து வருவதாகவும் அங்கு அவரை காரை ஏற்றி கொ.ன்று விடுமாறும் கூறியுள்ளார்.

இதற்காக புவனேஸ்வரி தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் பெற்று கொடுத்துள்ளார்.திட்டத்தின்படி கடந்த 2-ந் தேதி தனது கணவரிடம் ஆசை வார்த்தை பேசி புவனேஸ்வரி குமுளிக்கு அழைத்து சென்றுள்ளார்.தாங்கள் வந்த விபரத்தை கூலிப்படையினருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.கூடலூர் அருகே தம்மணம்பட்டி பகுதியில் உள்ள தொட்டிபாலத்தை அவர்கள் பார்த்துவிட்டு திரும்ப வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது ஸ்கூட்டர் பழுதான நிலையில் கவுதம் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு நடந்து வந்தார்.அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதமின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.காரில் இருந்து இறங்கிய 5 பேர் கவுதமை கீழே தள்ளி கால்களால் மிதித்து சரமாரியாக தாக்கி காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து காரின் கேரள பதிவெண்ணை அடிப்படையாக வைத்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோதிய கார் மற்றும் 5 பேர் கும்பலை தேடி வந்தனர்.இந்த விஷயம் வெளியே தெரிந்து விடும் என நினைத்து புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.கவுதமனை கொலை செய்ய முயன்ற நிரஞ்சன்ராஜா (36) பிரதீப் (35), மனோஜ்குமார் (20), ஆல்பர்ட் (34), ஜெயசத்யா (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஜெட்லி என்பவரை தேடி வருகின்றனர்