HEALTH

தினமும் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 15 மருத்துவ பயன்கள்

சமையலில் உணவின் சுவையை அதிகரிக்க உதவும் ஒரு உணவுப் பொருள் தான் இஞ்சி. இத்தகைய இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதிலும் இதனை டீ போட்டு குடிப்பது இன்னும் நல்லது.

இதனால் அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருந்து, அதன் மூலம் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகும். அதிலும் இதனை பாலுடன் சேர்த்து குடிப்பதை விட, கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, கொதிக்க விட்டு தேன், புதினா சேர்த்து கலந்து குடித்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

தேநீர் குடிப்பதால், மனம், மூளை சுறுசுறுப்படையும் அதுவும் இஞ்சி டீ குடித்தால் உற்சாகம் இரண்டு மடங்காகிவிடும் இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று முன்நோா்கள் சொல்வாா்கள் என்பதற்கிணங்க இஞ்சி டீ யிலுள்ள விசேஷ குணங்களை பார்ப்போம்.

இஞ்சியில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ளது, அதோடு மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற கனிம சத்துக்களும் அடங்கி உள்ளன.எனவே தினமும் மறக்காமல் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வாருங்கள். சரி, இப்போது இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!