NEWS

நட்பைத் துண்டித்துக்கொண்டதற்காக பிரித்தானிய பெண்ணின் முன்னாள் காதலன் செய்த பயங்கர செயல்..!

உறவைத் துண்டித்துக்கொண்டதற்காக பிரித்தானிய பெண்ணின் முன்னாள் காதலன் ஒருவர் அவரது முகத்தில் ஆசிட் வீசிய நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் வாழும் Dr Rym Alaoui என்ற பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டுக் கதவை பெண் ஒருவர் தட்டியுள்ளார்.

யார் என்று பார்ப்பதற்காக கதவைத் திறந்த Alaoui என்ற அந்த இளம் பெண் மருத்துவர் முகத்தில் ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி விட்டார் வந்த பெண்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர, Alaouiஇன் நிலை கண்டு உடனடியாக ஆம்புலன்சை அழைத்துள்ளார்கள் அவர்கள்.

இதற்கிடையில், Alaouiயின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பிய பெண்ணை பொலிசார் தேடத்துவங்கியுள்ளார்கள்.

தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான CCTV கமெராக்களை ஆராய்ந்த பொலிசாருக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. முதல் கமெராவில் சிக்கிய அந்த பெண் கடைசி கமெராவுக்கு வரும்போதுதான் அவர் பெண்ணே இல்லை என்ற அதிரவைக்கும் உண்மை தெரியவந்துள்ளது.

ஆம், ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு, Dr Alaoui வீட்டுக்கு வந்து அவரது முகத்தில் ஆசிட் அடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

அவர் யார் என விசாரிக்கும்போது, Alaouiஉடன் பயிற்சி பெற்றவரும், அவருக்கு அறிமுகமான மருத்துவ மாணவருமான Milad Rouf (25)தான் அந்த நபர் என்பது தெரியவந்தது.

அதாவது, Milad, பெண் போல வேடமிட்டு, Alaoui மீது ஆசிட் வீசி விட்டு, தப்பியோடியிருக்கிறார். Miladஇன் வீட்டை சோதனையிட்டபோது, அவர் அந்த உடைகளை வாங்கியதற்கான ஆதாரங்களும் சிக்க, அவர் கைது செய்யப்பட்டார்.

தான், Alaoui முகத்தில் ஆசிட் ஊற்றியதை Milad ஒப்புக்கொண்டுள்ளார். விடயம் என்னவென்றால் இருவரும் Cardiff பல்கலைக்கழகத்தில் பயிலும்போது பழகியிருக்கிறார்கள். கொரோனா பரவல் சூழல் காரணமாக இருவராலும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போயிருக்கிறது. பிறகு, Alaoui, Miladஉடனான நட்பைத் துண்டித்துக்கொண்டிருக்கிறார்.

அதற்குப் பழிவாங்கத்தான் Milad அவர் முகத்தில் ஆசிட் அடித்திருக்கிறார். Alaouiயின் முகம், கழுத்து, கண்கள், நெஞ்சு, கைகள் ஆகிய இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவரது வலது கண்ணில் பார்வை போய்விட்டது. அவரால் இரவில் தூங்கும்போது கூட தன் கண்ணிமைகளை மூட முடியாத பரிதாப நிலையில் இருக்கிறார்.

தற்போது Alaouiயின் சகோதரி அவருக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார். Alaouiக்கு தேவைப்படும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் கிடையாதாம். தனியார் மருத்துவமனையில்தான் அவர் அந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். அதற்கு 60,000 பவுண்டுகள் வரை ஆகும் என்பதால், அவரது குடும்பத்தினர் நிதிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.