11 வயதிலேயே தாய், 5 உடன்பிறப்புகளுக்கு வேலை செய்து குடும்பத்தையே தாங்கும் சிறுவனின் செயல்.. உருகவைக்கும் பதிவு..!
ஈழத்தில் மிகவும் கஷ்டமான சூழலில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. தந்தை இல்லாத அந்த வீட்டில் மூத்த குழந்தைக்கே 11 வயது தான் ஆகின்றது. ஆணும், பெண்ணுமாக அவனுக்குப் பின்னால் வரிசையாக ஐந்து பேர். தாய் உள்பட 6 பேருக்கும் தானே இரவு, பகல் பார்க்காமல் உழைத்து சோறு போடுகிறார் அந்த 11 வயது சிறுவன்.இதைக் கேட்டாலே துயரமாக இருக்கிறது அல்லவா? உண்மையில் அப்படியான ஒரு வாழ்வியல் சூழலில்தான் வாழ்ந்துவந்தான். இந்த சின்ன வயதிலேயே மொத்த குடும்பச் சுமையையும் சுமக்கும் நிலையில் இருந்தான் அந்த சிறுவன்.

அவனது தந்தையே வரிசையாக 6 குழந்தைகளைப் பெற்றுவிட்டு ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் அவர் குடும்பத்துக்கு உதவிகள் எதுவும் செய்யவில்லையாம். இப்படியான சூழலில், தான் வீட்டுக்கு மூத்தவனான 11 வயது சிறுவன் குடும்பத்தையே சுமக்கத் துவங்கினான்.
தன் குடும்பத்தின் பசிபோக்க சிற்றுண்டி கடையில் உணவு எடுத்து அதை பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேசனில் பார்சலாக விற்றுவந்தான். இதை இலங்கையில் இருக்கும் டியூப் தமிழ் என்னும் ஊடகம் வெளிப்படுத்த அதைப் பார்த்துவிட்டு கனடாவில் வாழும் உமேஷ் என்னும் 12 வயது சிறுவன் உதவிசெய்ய முன்வந்தார்.

கனடாவில் வீடு, வீடாக பேப்பர் போட்டு அதில் கிடைத்த வருமானத்தை ஈழத்தில் கஷ்டப்படும் 11 வயது சிறுவனுக்கு அனுப்பியிருக்கிறார். கூடவே டியூப் தமிழ் ஊடகமும் சிறுவனின் குடும்பத்துக்கு நல உதவி செய்ததோடு, அந்த சிறுவனின் படிப்புக்கும் உதவி செய்துள்ளது.
குறித்த அந்த சிறுவனின் வீட்டில் ஒரு தலையணை வசதிகூட இல்லாமல் குழந்தைகள் ஆங்காங்கே படுத்திருப்பது, விறகு அடிப்பில் வெறுமனே சோறை மட்டும் சமைத்து சாப்பிடுவது என அவர்களின் குடும்ப சூழல் உருகவைக்கிறது. அவர்களின் பொருளாதாரப் பலத்துக்காக கோழி குஞ்சுகளையும் இந்த ஊடகம் சார்பில் வாங்கிக்கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
