NEWS

ஆத்தாடி ரோட்டு ஓரத்துல குவியல் குவியலாக மேயும் பாம்புகள்… அசல்டாக தூக்கி எறியும் நபர்.. பகீர் காட்சி!

பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும். அதிலும் பாம்பை கண்டாலே பலரும் அஞ்சுவார்கள். ஆனால், சிலர் பாம்பை வீட்டில் வளர்ப்பதும், கொஞ்சுவதும் அசால்ட்டாக கையில் எடுத்து விளையாடுவதை கண்டிருப்போம்.

அந்த வகையில், இணையத்தில் வைரலான வீடியோ காட்சி ஒன்றில், ரோட்டு ஓரத்தில், பாம்பு படைகளே குவியலாக மேய்ந்துகொண்டிருக்கிறது.

இதைக்கண்ட வாகன ஓட்டிகள் வீடியோ எடுக்க, ஒரு நபர் அசால்ட்டாக கையில் பிடித்து தூக்கி காட்டுக்குள் எறிகிறார்.

இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.