2 நிமிடத்தில் பல் வலியை துரத்தி அடிக்க மாயாஜால புள்ளி!
மனிதர்களுக்கு ஏற்படும் வலிகளில் மிகவும் முக்கியமான வலி என்றால் அது பல் வலிதான். ஏனெனில் பல் வலி ஏற்படும் போது அவர்களால் உணவை சரியாக உண்ண முடியாது. உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கும் உணவு இல்லாதபோது தானாக நமது உடல் விரைவில் சோர்வடைய தொடங்கும்.

பல் வலி குணமாகும் வரை நம்மால் எந்த வேலையையும் கவனமாக செய்ய முடியாது. பல் வலி என்பது பற்களை மட்டுமல்லால் நமது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் ஒரு விஷயமாகும்.சொத்தை பல், ஈறுகளில் பிரச்சினை, உடைந்த பற்கள் என பல் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளது.

கடுமையான பல் வலி ஏற்படும்போது நாம் முதலில் தேடுவது மருத்துவரைத்தான். ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூறி விட்டு சென்றிருக்கும் நம் முன்னோர்கள் பல் வலியை விட்டு வைத்திருப்பார்களா?. நமது முன்னோர்கள் பயனப்டுத்திய மிகுந்த நம்பிக்கைக்குரிய பல் வலிக்கான எளிய வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.